/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சந்திர கிரகணத்தால் கோவில் நடையடைப்பு
/
சந்திர கிரகணத்தால் கோவில் நடையடைப்பு
ADDED : செப் 07, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, சந்திர கிரகணம் நிகழ்வதால், இன்று மாலை, 6:00 மணிக்கு ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நடை சாற்றப்படுகிறது. நாளை காலை, 5:30 மணியளவில் புண்ணியவாசனம் செய்த பின், 6:00 மணிக்கு வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்படும்.
இதேபோல் சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று மாலை, 6:௦௦ மணி முதல் நாளை அதிகாலை, 5:30 மணி வரை நடை மூடப்படும்.
அதன் பிறகு நடை திறந்து, சுத்தி மற்றும் புண்யாவாசனத்தை தொடர்ந்து நடை திறக்கப்படும். நாளை நடக்கும் வேங்கை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.