நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரம் அருகே, ஆக்கிரமிப்பில் இருந்த, 7.87 ஏக்கர் பரப்-புள்ள கோவில் நிலங்களை, அறநிலையத் துறையினர் நேற்று மீட்-டனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள கொண்டரசம்பா-ளையம், விநாயகர் கோவிலுக்கு சொந்தமான கொட்டாப்புளிபா-ளையத்தில் உள்ள, 7.87 ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பூர் உதவி ஆணையர் ஹர்ஷினி தலைமையில், ஆலய நிலங்கள் தனி தாசில்தார் ரவீந்-திரன், ஆய்வாளர் பவானி, செயல் அலுவலர் சுந்தர வடிவேல், கோவில் தக்கார் மல்லிகா ஆகியோர் நேற்று, 15.74 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை மீட்டு, கோவிலுக்கு சொந்தமான பூமி என்ற அறிவிப்பு பலகையை வைத்தனர்.

