ADDED : செப் 28, 2026 06:12 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:மொடக்குறிச்சி
வடுகபட்டி பண்ணை கிணறு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, 47; பந்தல்
போடும் வேலை செய்தார். வடபழனி முருகன் கோவிலில் பெயிண்ட் வேலைக்காக
சாரம் கட்டும் பணியில் கடந்த, 25ம் தேதி காலை ஈடுபட்டிருந்தார்.
மூலஸ்தான கோபுரத்தில், 20 அடி உயரத்தில் சாரம் அமைக்கும் பணியில்
தடுமாறி விழுந்தார். வயிற்று பகுதியில் பலத்த காயமடைந்தார். ஈரோடு
அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், மருத்துவ
பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. அறச்சலுார்
போலீசார் விசாரிக்கின்றனர்.
