ADDED : பிப் 17, 2025 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்ரம-ணியசுவாமி கோவிலில், நடப்பாண்டு தைப்பூச தேர் திருவிழா முடிந்த நிலையில், மலை அடிவாரத்தில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நந்தவன தோட்ட தெப்பக்குளத்தில் பரிவேட்டை தெப்ப உற்சவம் நேற்று காலை நடந்தது.
முன்னதாக பரிவேட்டை மண்டபத்துக்கு சுவாமி எழுந்தரு-ளினார், இதையடுத்து குளத்தில் தெப்பம் விடப்பட்டது. இன்று மகா தரிசனம் காலை, 9:00 மணிக்கு நடக்கவுள்ளது. வரும், 20ம் தேதி கொடி இறக்குதல், பாலிகை நீர்த்துறை சேர்த்தலுடன் விழா நிறைவடைகிறது.

