/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: ஈரோட்டில் பலத்த பாதுகாப்பு
/
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: ஈரோட்டில் பலத்த பாதுகாப்பு
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: ஈரோட்டில் பலத்த பாதுகாப்பு
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: ஈரோட்டில் பலத்த பாதுகாப்பு
ADDED : ஏப் 24, 2025 01:36 AM
ஈரோடு:காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக, ஈரோடு மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காஷ்மீரின் அனந்த்தாக் மாவட்டம், பஹல்காமில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், 27 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதன் எதிரொலியாக, நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு, ஏ.டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் உள்ளிட்டோர் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயிலில், மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகள் உடமைகள் பரிசோதிக்கப்பட்டன. இதே போல், 46 மசூதிகள், ஹிந்து கோவில்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 11 செக்போஸ்ட்களில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். நேற்று காலை பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு தீவிரப்
படுத்தப்பட்டு இருந்தது.

