ADDED : மே 07, 2026 06:37 AM

அ நிறம் | அளவு
ஈரோடு :தேர்தல் ஓட்டுப்பதிவு தினத்தில், போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்ட, 14 போக்குவரத்து காப்பாளர்களுக்கு தேர்தல் பிரிவு டி.எஸ்.பி., பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்.,23ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, போக்குவரத்தை சீர் செய்து, தேர்தலை அமைதியான முறையில் நடத்திட மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, ஈரோடு நகரில் பல்வேறு இடங்களில், போக்குவரத்து காப்பாளர்கள், 14 பேர் இப்பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுக்கு, தேர்தல் பிரிவு மற்றும் மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி., சுகுமார் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
