ADDED : மே 11, 2026 03:21 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோட்டில்
சில்லரை ஜவுளி வர்த்தகம், சட்டசபை தேர்தல் முடிந்த பின்
திருப்திகரமாக உள்ளதால், ஜவுளி வர்த்தகர்கள் ஆறுதல்
அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தேர்தல்
ஓட்டுப்பதிவுக்கு பின் கடந்த, 10 நாட்களாக சில்லரை வர்த்தகம்
திருப்திகரமாக உள்ளது. ஜட்டி, பனியன், குழந்தைகளுக்கான கவுன்
உள்ளிட்ட துணி வகைகளை பொதுமக்கள் அதிகளவில் விரும்பி வாங்கி
செல்கின்றனர். கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில்
இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மொத்த
வியாபாரிகள், 50 சதவீதம் ஜவுளி ரகங்களை வாங்கி சென்றனர்.
தேர்தல்
முடிந்த பின் வர்த்தகம் இதுவரை திருப்திகரமாகவே உள்ளது. பள்ளி
செல்லும் குழந்தைகளுக்கு தேவையான உள்ளாடைகளை பெற்றோர்கள் வாங்கி
செல்கின்றனர். இவ்வாறு கூறினர்.
