/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை முருகன் கோவிலில் 18ல் தைப்பூச விழா கொடியேற்றம்
/
சென்னிமலை முருகன் கோவிலில் 18ல் தைப்பூச விழா கொடியேற்றம்
சென்னிமலை முருகன் கோவிலில் 18ல் தைப்பூச விழா கொடியேற்றம்
சென்னிமலை முருகன் கோவிலில் 18ல் தைப்பூச விழா கொடியேற்றம்
ADDED : ஜன 14, 2024 11:32 AM
சென்னிமலை: சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு தைப்பூச விழா, வரும், ௧௮ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்று காலை, 11:30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. அன்றிரவும், 19-ம் தேதி இரவும் பல்லக்கு சேவை நடக்கிறது. 20ம் தேதி இரவு மயில் வாகனக்காட்சி, 22ம் தேதி இரவு பஞ்சமூர்த்தி புறப்பாடு, வெள்ளிமயில் வாகனக்காட்சியும் நடக்கிறது. 23-ம் தேதி இரவு யானை வாகனத்தில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை திருவீதியுலா; 24-ம் தேதி மாலை கைலயங்கிரி வாகனக்காட்சி, இரவு காமதேனு வாகனக்காட்சி நடக்கிறது. 25-ம் தேதி மாலை சிறப்பு அபிஷேகம், இரவில் வள்ளி, தெய்வானை சமதே முத்துகுமாரசாமி வசந்த திருக்கல்யாணமும் நடக்கிறது. -26ம் தேதி காலை, 6:00 மணிக்குள் 7 மணிக்கும் தேரோட்டம் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். 27-ம் தேதி மாலை தேர் நிலை அடைகிறது. 28-ம் தேதி இரவு பரிவேட்டை குதிரை வாகனக்காட்சி, 29-ம் தேதி தெப்போற்சவம், பூத வாகன காட்சி நடக்கிறது.
30-ம் தேதி இரவு, மகாதரிசனம் நடக்கிறது. இதில் நடராஜ பெருமான் வெள்ளி விமானத்திலும், சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்திலும் திருவீதி உலா நடக்கிறது. அன்று சென்னிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். 31ம் தேதி மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் தைப்பூச விழா நிறைவடைகிறது.

