தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிவன்மலையில் தைப்பூச தேரோட்டம்

சிவன்மலையில் தைப்பூச தேரோட்டம்

சிவன்மலையில் தைப்பூச தேரோட்டம்


ADDED : பிப் 02, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 06:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காங்கேயம்: காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணி-யசுவாமி கோவிலின் தைப்பூச தேர் திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக அதிகாலை, 3:30 மணிக்கு சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம் நடந்-தது.

தொடர்ந்து வேல் மற்றும் சேவற்கொடி கொண்டு, தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் காலை, 6:00 மணிக்கு தேருக்கு எழுந்தருளினார். மாலை, 4:30 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்-தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்திதுறை அமைச்சர் சாமிநாதன், தி.மு.க., சுற்று-சூழல் அணி அமைப்பாளர் மற்றும் அயலக தமிழர் நலவாரியம் தலைவர் கார்த்திகேய சிவ-சேனாபதி, திருப்பூர் இந்துசமய அறநிலையத்-துறை உதவி ஆணையர் தமிழ்வாணன், உதவி சிவன்மலை உதவி ஆணையர் கிருத்திகா,

திருப்பூர் எஸ்.பி., கிருஷ்யாதவ் அசோக், திருப்பூர் தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், காங்கேயம் ஏ.எஸ்.பி., அர்பிதா

ராஜ்புட் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் வடம் பிடித்து தொடங்கி

வைத்தனர்.

பக்தர்களின் அரோகரா கோஷங்களுக்கு மத்-தியில், 200 மீட்டர் துாரம் இழுக்கப்பட்டு நடு வீதியில், 5:05 மணிக்கு நிலை நிறுத்தப்பட்டது. இன்று, நாளை கிரிவல பாதையை தேர் சுற்றி வந்து தேர் நிலைக்கு வரும். தேரோட்டத்தில்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி, தீர்த்தக்-குடம் எடுத்தும், பாத யாத்திரையாகவும் வந்தனர். காங்கேயத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்-பட்டன.

காங்கேயம் ஏ.எஸ்.பி.,

தலைமையில், 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு

பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us