தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சென்னிமலை முருகன் கோவிலில் இன்று இரவு தைப்பூச மகா தரிசனம்

சென்னிமலை முருகன் கோவிலில் இன்று இரவு தைப்பூச மகா தரிசனம்

சென்னிமலை முருகன் கோவிலில் இன்று இரவு தைப்பூச மகா தரிசனம்


ADDED : பிப் 05, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 04:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னிமலை: சென்னிமலை, சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதரிசனம் இன்று வியாழக்கி-ழமை இரவு நடக்கிறது இதில், வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி வலம் நடக்கும். இதில் விடிய, விடிய லட்சக்க-ணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வர்.

சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழா கடந்த, 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் பல்லாக்கு சேவை, மயில் வாகன காட்சி, யானை வாகன காட்சி, பஞ்ச-மூர்த்தி புறப்பாடு, திருத்தேரோட்டம், குதிரை வாகன காட்சி, பரிவேட்டை, தெப்போற்சவம் என தொடர்ந்து விழா நடந்தது.தைப்பூச விழாவின் மிக முக்கிய நிகழ்வான மகாதரிசனம் நிகழ்ச்சி, இன்று இரவு நடக்கிறது. முன்னதாக காலை, 10:00 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி, தெய்-வானை சமேத முத்துகுமாரசாமிக்கு மகா சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து மூன்று டன் மலர்களால் அபிஷேகம் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு நடராஜ பெருமான் வெள்ளி விமானத்திலும், சுப்பிரமணிய சுவாமி சமேதராக வெள்ளி மயில் வாகனத்தில் பஞ்ச மூர்த்தி திருவீதி உலா நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, விடிய, விடிய சாமி தரிசனம் செய்வர். இரவு 9:00 மணிக்கு நாதஸ்வர தவிலிசை கச்சேரியுடன் நான்கு ராஜ வீதி-களிலும் சுவாமிகள் வலம் வந்து அதிகாலை 5:00 மணிக்கு கைலா-ச

நாதர் கோவிலுக்குள் சென்றடையும். நாளை மஞ்சள் நீர் அபிஷே-கத்துடன் 15 நாள் தேர் திருவிழா நிறைவுக்கு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us