நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு சார்பில் கடந்த, 18ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை, கோட்ட தலைவர் சந்திரகுமார் தலைமையில் நேற்று காலை துவக்கினர்.
கள பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். பணிகளை முறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட, 18 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

