ADDED : செப் 22, 2024 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டி, எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்தவர் சக்திவேல், 27; முட்டை வண்டியில் லோடுமேன். இவரது அக்கா மகன், 18 வயது சிறுவன். இவர், பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், சிறுவனுக்கும், சக்திவேலுக்கும் குடிப்பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 11:45 மணிக்கு, 'குடி' போதையில் இருந்த சக்திவேலுக்கும், சிறுவனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிறுவன், மரக்கட்டையால் தாய் மாமன் சக்திவேலை தாக்கினார்.நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள், சக்திவேல் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகார்படி, நல்லிபாளையம் போலீசார், சிறுவனை கைது செய்தனர்.