/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாசலுக்கு வந்த பு.பூனை அடர் வனத்தில் விடுவிப்பு
/
வாசலுக்கு வந்த பு.பூனை அடர் வனத்தில் விடுவிப்பு
ADDED : டிச 17, 2025 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர் அருகே சங்கரபாளையம், கிழக்கத்தியான் தோட்டத்தை சேர்ந்த விவசாயி சின்னசாமி, 56; நேற்று முன்தினம் இரவு இவ-ரது வீட்டு வாசலில், ஒரு புனுகு பூனை படுத்திருந்தது.
துரத்தி விட்டும் எங்கும் நகராததால் ஒரு கூடையால் மூடி வைத்தார். அதேசமயம் அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். நேற்று காலை சென்ற வனத்துறையினர் புனுகு பூனையை மீட்டு, வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

