/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சி 57வது வார்டில் சீரமைக்காத சாலையால் அவதி
/
மாநகராட்சி 57வது வார்டில் சீரமைக்காத சாலையால் அவதி
மாநகராட்சி 57வது வார்டில் சீரமைக்காத சாலையால் அவதி
மாநகராட்சி 57வது வார்டில் சீரமைக்காத சாலையால் அவதி
ADDED : டிச 27, 2025 07:52 AM
ஈரோடு : ஈரோடு மாநகராட்சி 57வது வார்டில் சீரமைக்காத சாலையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வரு-கின்றனர்.
ஈரோடு மாநகராட்சி, 57வது வார்டு மூலப்பாளையம் அருகில் உள்ள எல்.ஐ.சி., நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வெளியேறியது.
மக்கள் புகாரின்படி கடந்த மாதம், 4ம் தேதி சீரமைப்பு பணி தொடங்கினர். இதற்காக சாலை நடுவில் குழி தோண்டி, சேத-மான பாதாள சாக்கடை குழாய்களை அகற்றி, புதியதாக பைபர் குழாய் அமைத்தனர். பிறகு மண்ணை போட்டு சென்று விட்டனர்.
தார்ச்சாலை அமைக்காததால் மண்ணை கொட்டி சமன்படுத்திய பகுதி பள்ளமாகி விட்டது. இதனால் இரவில் டூவீலர்களில் வருவோர் விபத்தை சந்திக்கின்றனர்.
மாநகராட்சி நிர்வாகம் மேலும் மெத்தனம் காட்டாமல், தார்ச்-சாலை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

