ADDED : அக் 19, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மக்களிடம் குறைகேட்ட டி.ஐ.ஜி.,
ஈரோடு, அக். 19-
ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோவை டி.ஐ.ஜி., சரவணசுந்தர் மனுக்களை பெற்றார். ஈரோடு எஸ்.பி., ஜவகர் முன்னிலை வகித்தார்.
எஸ்.பி., அலுவலகம் வந்த பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று, பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் இயங்கி வரும் சிறப்பு பிரிவுகளை ஆய்வு செய்து, சம்மந்தப்பட்ட பிரிவில் பராமரிக்கப்படும் அனைத்து ஆவணங்களை பார்வையிட்டார். தலைமை அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் தபால்களுக்கு உடனுக்குடன் பதிவறிக்கை தயார் செய்து அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.

