நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம் : டி.என்.பாளையத்தை அடுத்த டி.ஜி.புதுாரை சேர்ந்தவர் தாமோதரன், 42; டிரைவர் வேலை செய்து வந்தார்.
இவரின் மனைவி அமுதா. தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.தாமோதரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், குடும்பத்தில் பிரச்னை ஏற்படவே, சில வருடங்களுக்கு முன் குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு அமுதா சென்று விட்டார். இதனால் தாமோதரன் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று காலை வீட்டு விட்டத்தில் சேலையால் துாக்கிட்டு சடலமாக தொங்கினார். அக்கம்பக்கத்தினர் தகவலின்படி சென்ற பங்களாப்புதுார் போலீசார் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் தற்தொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.