/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓட்டுச்சாவடிகளை சென்றடைந்த இ.வி.எம்.,
/
ஓட்டுச்சாவடிகளை சென்றடைந்த இ.வி.எம்.,
ADDED : ஏப் 19, 2024 06:34 AM
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு 8 சட்டசபை தொகுதிக்கும், அந்தந்த தொகுதிக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் (இ.வி.எம்.,) உள்ளிட்ட கருவிகள் மற்றும் பொருட்கள் சென்றடைந்தன.மாவட்டத்தில் உள்ள, 2,222 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக, கூடுதலாக, 20 சதவீத இருப்புடன் சேர்த்து தலா, 2,663 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம், 2,885 வி.விபேட், வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன.ஓட்டுப்பதிவு தலைமை அலுவலர், ஓட்டுப்பதிவு அலுவலர்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் சென்று, இறக்கி வைத்தனர்.ஈரோடு தாலுகா அலுவலகத்தில் இருந்து ஈரோடு மேற்கு தொகுதிக்கும், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இ.வி.எம்.,கள் மற்றும் ஓட்டுச்சாவடிக்கு தேவையான பொருட்கள், பிளாஸ்டிக் டிரம், ஓட்டுப்போடும் போது ஏற்படுத்தப்படும் மறைவுக்கான அட்டை போன்றவற்றை எடுத்து சென்றனர்.
ஜி.பி.ஆர்.எஸ்., கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்களில், இ.வி.எம்., உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்லப்படுவதை, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்தனர்.அனைத்து ஓட்டு சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இ.வி.எம்.,களுடன் சென்ற அலுவலர்கள், அங்கேயே தங்கினர். இ.வி.எம்.,களில் வேட்பாளர் விபரம் கொண்ட, போஸ்டர்களை ஒட்டி, ஓட்டுப்பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்க தயாராக உள்ளனர்.

