/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காற்றுடன் கூடிய மழைக்கு சரிந்தது குதிரை ெஷட்
/
காற்றுடன் கூடிய மழைக்கு சரிந்தது குதிரை ெஷட்
ADDED : ஆக 10, 2025 01:00 AM
அந்தியூர், அந்தியூர் புதுப்பாளையத்தில், பிரசித்தி பெற்ற குருநாத சுவாமி கோவில் திருவிழா, வரும் 13 துவங்கி, நான்கு நாட்கள் நடக்கிறது. தென்னக அளவில், குதிரை சந்தை, கால்நடை சந்தை கூடும் நிலையில், ெஷட்டுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தண்ணீர்பந்தல்பாளையத்திலிருந்து கொண்ணமரத்தையன் கோவில் செல்லும் வழியில், 200 மீட்டர் தொலைவுக்கு, மூன்று குதிரை ெஷட்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மதியம், 3:00 மணிக்கு அந்தியூர், புதுப்பாளையம், புதுமேட்டூர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், அரை மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. மேலும், தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல், குதிரை ெஷட் முற்றிலுமாக சாய்ந்து விழுந்தது.
இதையடுத்து, காற்றுக்கு விழுந்த பொருட்களை பிரித்த பணியாளர்கள், மீண்டும் ெஷட் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.