/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இன்று நிறைவடைகிறது தி ஜூவல்லரி எக்ஸ்போ
/
இன்று நிறைவடைகிறது தி ஜூவல்லரி எக்ஸ்போ
ADDED : ஏப் 27, 2025 04:09 AM
ஈரோடு: ஈரோட்டில், பெருந்துறை பிரதான சாலையில் உள்ள பழையபாளையம், சக்தி துரைசாமி திருமண மண்டபத்தில், சென்னை யுனைடெட் எக்ஸிபிஷன்ஸ் நிறுவனம் சார்பில், தி ஜூவல்லரி எக்ஸ்போ, ௨௫ம் தேதி தொடங்கியது. இன்றுடன் கண்காட்சி நிறைவடைகிறது. காலை, 10:௦௦ மணி முதல், இரவு, 8:௦௦ மணி வரை நடக்கிறது.
கண்காட்சியில் செங்குந்தர் பள்ளி குழும தாளாளர் சந்திரா ரங்கா, வீவ்ஸ் இயக்குனர் சுபா கிரி, கே.கே.எஸ்.கே., ஹில் பிளான்டேசன் நிறுவன இயக்குகுனர் ஆயிஷா ரூமனா ஆனன், பர்ஸ்ட் இன் நிறுவனர் ஆனந்தி, ஸ்ரீகல்யான் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் கோமதி ஸ்ரீகல்யான், ஒயி ஈரோடு சேப்டர் சேர் பார்ட்னர், ஈரோடு கெமிக்கல்ஸ் யாதவி யேஸகேஷ், ஆர்.ஆர்.துளசி பில்டர்ஸ் இயக்குனர் நிரஞ்சினி, சிடெல்லா நிறுவனர் நிவேதா தங்கவேல் மற்றும் சன்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் செல்வலட்சுமி கார்த்திகேயன், மில்கி மிஸ்ட் டெய்ரி புட் நிறுவன இயக்குனர் அனிதா சதிஸ்குமார், வி.தங்கவேல் அண்ட் சன்ஸ் விஜயலக்ஷ்மி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
பழமையான மாடல் முதல் தற்போதைய நவீன மாடல் வரையிலான நகைகள், எண்ணற்ற டிசைன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. அனுமதி இலவசம். ஏதேனும் அடையாள அட்டையுடன் முன்பதிவு அவசியம்.

