/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கடம்பூர் பஸ் ஸ்டாண்டில் எரியாத விளக்கு சரியானது
/
கடம்பூர் பஸ் ஸ்டாண்டில் எரியாத விளக்கு சரியானது
ADDED : ஜன 02, 2025 01:39 AM
கடம்பூர் பஸ் ஸ்டாண்டில் எரியாத விளக்கு சரியானது
சத்தியமங்கலம், ஜன. 2-
சத்தியமங்கலம் அடுத்த, குத்தியாலத்துார் ஊராட்சிக்குட்பட்ட, கடம்பூர் பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கு கடந்த ஆறு மாதங்களாக எரிவதே இல்லை. இதனால் பஸ்ஸ்டாண்ட் முழுவதும் இருளில் மூழ்கி கிடந்தது. பனிக்காலம் என்பதால் வனவிலங்குகள் ஊருக்குள் படையெடுக்கிறது. இந்தநிலையில், கடம்பூர் பஸ் ஸ்டாண்ட் பகுதி முழுவதும் கும்மிருட்டாக காணப்படுவதால், எது நடந்தாலும் தெரியாத அளவிற்கு இருக்கிறது. இதுகுறித்து, பொதுமக்கள் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டிவந்தனர். இதுகுறித்த செய்தி நமது நாளிதழில் படத்துடன் வெளியானது. அதன் எதிரொலியாக, ஊராட்சி நிர்வாகம் சார்பில், பழுதான விளக்கை சரி செய்தனர்.

