நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: தாளவாடி அருகே தொட்டகாஜனுார் கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவண்ணா.
இவர் தனது தோட்டத்தில் பட்டி அமைத்து ஆடு வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, ஒரு ஆட்டை கடித்து கொன்றது. இதனால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.