நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொடக்குறிச்சி, ஈரோடு அருகே 46 புதுார், கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் தர்மன், 35; இவரின் மனைவி பூங்கொடி, 28; தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.
குடும்பத்துடன் தறி ஓட்டும் தொழில் செய்து வருகின்றனர். தர்மன் தினமும் மது குடித்து கொண்டு, மனைவியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த, 20ல் பைக்கை எங்கோ நிறுத்திவிட்டு வந்துவிட்டார். இதனால் மனைவியிடம் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து வெளியே சென்ற தர்மன் மீண்டும் வீடு திரும்பவில்லை. பூங்கொடி புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.