நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண் யானை
மர்மச்சாவு
அந்தியூர், அக். 11-
அந்தியூர் வனத்துறை, செல்லம்பாளையம் பீட், வட்டகாடு அருகே வனப்பகுதியில், நேற்று காலை ஒரு ஆண் யானை இறந்து கிடந்தது. கால்நடை மேய்ச்சலுக்கு சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், அந்தியூர் வனத்துறையினர்
சென்றனர்.
அரசு கால்நடை மருத்துவரை கொண்டு, அதே இடத்தில் உடற்கூறு பரிசோதனை நடந்தது. முன்னதாக தந்தம் வெட்டி எடுக்கப்பட்டது. யானைக்கு, ௨௦ வயது இருக்கும் என்றும், இரு நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் என தெரிவித்தனர். அதேசமயம் யானை சாவுக்கான காரணம் தெரியவில்லை.

