/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இன்றுடன் முடியும் அரையாண்டு தேர்வு
/
இன்றுடன் முடியும் அரையாண்டு தேர்வு
ADDED : டிச 23, 2024 09:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கடந்த, ௯ம் தேதி அரையாண்டு தேர்வு துவங்கியது. இன்றுடன் தேர்வு நிறைவு பெறுகிறது. பள்ளிகளுக்கு நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது. இதன்படி ஜன., ௧ம் தேதி வரை விடுமுறை நாட்களாகும்.
ஜன., 2ல் பள்ளிகள் திறக்கப்படும். அப்போது ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை, மூன்றாம் பருவ பாட புத்தகம், நோட்டு வழங்கப்படும். இதற்காக நோட்டு, புத்தகம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களும் சுற்றுலா தலங்கள், உறவினர் வீடுகளுக்கு சென்று வர காத்திருந்த நிலையில் இன்று மாலை பல்வேறு ஊர்களுக்கு செல்ல பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் கூட்டம் குவியும்.

