தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/'நாங்க சொன்னாதான் அமைச்சருக்கு பிரச்னையே புரிகிறது'

'நாங்க சொன்னாதான் அமைச்சருக்கு பிரச்னையே புரிகிறது'

'நாங்க சொன்னாதான் அமைச்சருக்கு பிரச்னையே புரிகிறது'


ADDED : பிப் 06, 2026 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 04:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: 'ஈரோடு மாவட்டத்தில் பிரச்னைகளின் தீவிரம், நாங்கள் தெரிவித்த பிறகே, அமைச்சர் முத்துசாமிக்கு தெரிய வருகிறது. குறிப்பாக நாங்கள் போராட்டம் அறிவித்த பிறகுதான் தீவிரம் புரிந்து நடவடிக்கை எடுக்கவும் செய்தார்' என்று, மாவட்ட பா.ஜ.,வினர், பட்டியல் போட்டு கூறுகின்றனர்.

இதுகுறித்து பா.ஜ., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் மக்கள் பிரச்னையை, கையில் எடுத்து நாங்கள் போராட்ட அறிவிப்பு அல்லது போராட்டத்துக்கு காலக்கெடு விதித்த பிறகுதான், அரசு மற்றும் அமைச்சரின் கவனத்துக்கே சென்றது. அதன் பிறகுதான் அமைச்சர் கவனம் செலுத்த தொடங்கினார். இந்த விவகாரத்தை தேர்தல் நேரத்தில் மேலும் முன்னெடுப்போம்.

நாங்கள் கூறிய பிரச்னைகள்:

* சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை சேதமாகி, நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் இருந்தது. அதை விரைந்து சீரமைத்து வாகனங்கள் சென்று வரும் வகையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்.

* அவினாசி-அத்திகடவு திட்டத்தை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வராவிட்டால் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடக்கும் என நாங்களும், தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் தனித்தனியே போராட்டம் அறிவித்தோம்.

* சிவகிரியில் நடந்த இரட்டை கொலை சம்பவத்தில், கொலையாளிகளை பிடிக்க கெடு விதித்தோம்.

* பெருந்துறை சிப்காட் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது கிடப்புக்கு போனது. எங்கள் போராட்டத்தை அறிவித்தோம்.

* மாவட்டத்தில் தெருநாய்களால் பலியாகும் கால்நடைகளுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் போராட்டம் என அறிவித்தோம்.

இத்தனை பிரச்னைகளும் நாங்கள் கூறிய பிறகுதான் அமைச்சர் முத்துசாமி, அரசு அலுவலர்களுடன் ஆலோசித்து நடவடிக்கைக்கு முயன்றார். இது தவிர போராட்ட அறிவிப்பு வெளியிட்டதும் பிரச்னை குறித்து பேசவும் எங்களை அழைத்தார். அதாவது தி.மு.க.,வினரோ, அமைச்சர் முத்துசாமியோ, மக்கள் பிரச்னையை தீர்க்க நேரடியாக முன் வரவில்லை. இதுகுறித்து வரும் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பட்டியலிட்டு பேசுவோம்.

இவ்வாறு கூறினர்.

மொடக்குறிச்சி பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதி கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் பிரச்னையை தீர்ப்பதில், தி.மு.க., 'ஸ்லீப்பிங் மோடில்' தான் உள்ளது. ஒவ்வொரு பிரச்னைக்கும் நாம் போராடித்தான் தீர்வு பெற வேண்டிய நிலை உள்ளது. பிரச்னையை தீர்க்க வேண்டும் என்ற உணர்வு, ஞாபகம் அவர்களுக்கு இருப்பதில்லை. மற்றவர்கள் சொன்னால் தான் செய்கின்றனர்.

மக்களின் பிரச்னையை தீர்க்க, பா.ஜ., மட்டுமல்ல, அ.தி.மு.க.,வினரும் கூட போராடி வருகின்றனர். இதற்கு உதாரணமாக அவினாசி-அத்திகடவு திட்டம், பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் தொடர்பான பிரச்னைகளை கூறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us