/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கள்ளிப்பட்டியில் திருடிய கள்வனுக்கு வலை
/
கள்ளிப்பட்டியில் திருடிய கள்வனுக்கு வலை
ADDED : ஆக 17, 2024 04:23 AM
டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே கள்ளிப்பட்டியில் சாலையோரம் வணிக கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளனர்.
இந்நிலையில், 15ம் தேதி நள்ளிரவு, ௨:௦௦ மணியளவில் கள்ளிப்பட்டியில் உரக்கடை, எலக்ட்ரிக்கல் கடையில் ஷட்டர் பூட்டை உடைத்து, ஒரு மர்ம ஆசாமி பணத்தை கொள்ளையடித்து சென்றான்.
இந்த காட்சிகள் அனைத்தும் 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கொள்ளையடிக்க வந்த ஆசாமி, கேமரா ஒயர் என்று நினைத்து வேறு ஒரு ஒயரை துண்டித்து விட்டு கைவரிசை காட்டியுள்ளான். அதேசமயம் கேமராவில் பதிவாகும் காட்சி, ஒருவரின் மொபைல்போனிலும் பதிவாகும் வசதி உள்ளது. இந்த காட்சியும் பரவி வருகிறது. சத்தி-அத்தாணி சாலையில் சாவகாசமாக வந்து திருடிச்சென்ற ஆசாமியை, பங்களாபுதுார் போலீசார் தேடி வருகின்றனர்.

