தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாறியது அலுவலகம் முளைத்தது புது பேனர்

மாறியது அலுவலகம் முளைத்தது புது பேனர்

மாறியது அலுவலகம் முளைத்தது புது பேனர்


ADDED : நவ 03, 2025 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 03, 2025 02:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி:அ.தி.மு.க., கட்சியில் இருந்தும் கோபி எம்எல்ஏ செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ள நிலையில், கோபி அருகே கரட்டூரில் உள்ள கோபி எம்.எல்.ஏ., தொகுதி அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று புதிய பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

பச்சை நிறத்தில் உள்ள பேனரில், இடதுபுறம் எம்.ஜி.ஆர்., படம் அருகில் செங்கோட்டையன் படம், நடுவில் அண்ணாதுரை படம், வலது புறம் ஜெயலலிதா மற்றும் இரட்டை இலை படம் உள்ளது. இதன் நடுவில் அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என மட்டுமே அச்சிடப்பட்டிருந்தது. முன்னதாக இந்த அலுவலகம், புறநகர் மேற்கு மாவட்ட கட்சி அலுவலகம் மற்றும் கோபி சட்டசபை தொகுதி அலுவலகமாக இருந்தது. கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டதால் எம்.எல்.ஏ., அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us