ADDED : மே 08, 2024 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:நாகர்கோவில்,
கோட்டாரை சேர்ந்தவர் ரவி, 63; ஈரோடு, திருப்பூர், கோவை பகுதி
தொழிலதிபர்களிடம் எம்.எல்.ஏ., பேசுவதாக கூறி, ஆள் மாறாட்டம் செய்து
பணம் பறித்துள்ளார். இது தொடர்பாக ஈரோடு சைபர் க்ரைம் போலீசில், இவர்
மீது மூன்று வழக்குகள் பதிவாகி உள்ளன.
போலீசாருக்கு வந்த
புகாரின் அடிப்படையில், திருச்சி சென்று இந்த நபரின் மொபைல் எண் மற்றும்
ஜி-பே எண்ணை சோதனை செய்தனர். அது மாஸ் மீடியா என்ற மணி டிரான்ஸ்பர்
கடையில் இருந்து பண பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரவியை
கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 3 சிம் கார்டு, 2 மொபைல் போன், தமிழகத்தின் முக்கிய பிரமுகர்களின் மொபைல் போன் எண் விபரம்
அடங்கிய நோட்டுக்களை பறிமுதல் செய்ததாக, சைபர் கிரைம் போலீசார்
தெரிவித்துள்ளனர்.

