/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் நிகழ்ச்சி துவங்கியது
/
சென்னிமலை மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் நிகழ்ச்சி துவங்கியது
சென்னிமலை மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் நிகழ்ச்சி துவங்கியது
சென்னிமலை மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் நிகழ்ச்சி துவங்கியது
ADDED : அக் 31, 2024 06:28 AM
சென்னிமலை: சென்னிமலை, மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நவ., 7ம் தேதி நடக்கிறது. நேற்று கம்பம் நடும் விழா நடந்தது.
சென்னிமலை டவுன், காங்கேயம் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில். மாரியம்மனுக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், 15 நாட்கள் பொங்கல் வைபோகம் சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு விழா கடந்த, 23ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று இரவு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று முதல் தினமும் சிறப்பு பூஜை நடக்கும்.
நாளை காலை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கும். அதை தொடர்ந்து கம்பத்திற்கு தினமும் பெண்கள் பயபக்தியுடன் மஞ்சள் நீர் ஊற்றியும், கம்பத்திற்கு வேப்பிலை அலங்காரம் செய்தும், மஞ்சள் பூசியும் வழிபாடு நடத்துவர். சனிக்கி-ழமை முதல் தினமும் இரவு மாரியம்மன் பல்-வேறு வாகனங்களில் திருவீதி உலா காட்சி நடக்கும்.நவ., 6ம் தேதி இரவு மாவிளக்கு ஊர்வலம், சிறப்பு பூஜை நடக்கிறது. 7 ல் பொங்கல் விழா காலை 7:00 மணிக்கு தொடங்குகிறது. அன்று பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலி கொடுத்தும், முடி காணிக்கை செலுத்தியும் மாரி-யம்மனை வழிபடுவர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில், கோவில் பணியாளர்கள், கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.* முருங்கத்தொழுவு, மகா மாரியம்மன் தேர் திரு-விழா நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கி-யது. நவ., 6ல் கம்பம் நடும் நிகழ்ச்சி, 14ம் தேதி தேர் வடம் பிடித்தல், பொங்கல் விழா நடக்கிறது.