/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திருட்டில் ஈடுபட்டவரை பிடித்த பொதுமக்கள்
/
திருட்டில் ஈடுபட்டவரை பிடித்த பொதுமக்கள்
ADDED : நவ 07, 2024 01:33 AM
திருட்டில் ஈடுபட்டவரை
பிடித்த பொதுமக்கள்
காங்கேயம், நவ. 7-
வெள்ளகோவில் எல்.கே.சி., நகர் பகுதியில் வசித்து வருபவர் பாப்பா, 68. இவர் தனியாக வசித்துக் கொண்டு சலவை தொழில் செய்து வருகிறார், நேற்று முன்தினம் இரவு, இவரது வீட்டிற்கு பைக்கில் இரண்டு பேர் வந்து, துணி தேய்த்து கொடுக்கும்படி கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். பாப்பா காலையில் தேய்த்து தருகிறேன் என்று கூறிவிட்டு, வீட்டிற்குள் சென்றுள்ளார். இரவு, 10:00 மணியளவில் பாப்பாவின் வீட்டின் காம்பவுண்டு சுவரை தாண்டி யாரோ ஒருவர் குதித்துள்ளார். இதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் சிலர் சேர்ந்து, அந்த நபரை பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். வெள்ளகோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.