தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ துாய்மை பணியாளர்களின்'விசில்' மீண்டும் ஒலிக்கிறது

துாய்மை பணியாளர்களின்'விசில்' மீண்டும் ஒலிக்கிறது

துாய்மை பணியாளர்களின்'விசில்' மீண்டும் ஒலிக்கிறது


ADDED : மே 16, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாநகராட்சியில், 60வது வார்டுகளில் குப்பை சேகரிக்கும் பணியில், ஆயிரக்கணக்கான துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். குப்பை சேகரிக்கும் வாகனம் வருவதை மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக விசில் ஊதி செல்வது வழக்கமாக

இருந்தது. சட்டசபை தேர்தலில் த.வெ.க., கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதனால் விசிலடித்து குப்பை சேகரிக்க, தி.மு.க., தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இதென்னடா வம்பா போச்சு? என்று கருதி, விசில் ஊதுவதை நிறுத்தி விட்டனர். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க., ஒருவழியாக ஆட்சியிலும் அமர்ந்து விட்டது. தற்போது மீண்டும் விசில் ஊதியபடி குப்பை சேகரிக்கதொடங்கியுள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதியால், விசில் அடித்து குப்பை சேகரிப்பதை தவிர்த்தனர். விதிகள் தளர்த்தப்பட்டதால் மீண்டும் பழைய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. மாநகராட்சி சார்பில் எந்தவித நிர்ப்பந்தமும் செய்யவில்லை. இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us