நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மாணவனுக்கு கிடைத்த தீர்வு
நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மாணவனுக்கு கிடைத்த தீர்வு
ADDED : ஜூன் 06, 2026 04:21 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு, திண்டல் புது காலனியை சேர்ந்த சையத் முகம்மது, ஈரோட்டில் ஒரு தனியார் கலை கல்லுாரியில் கடந்த, 2023ல் பி.காம்., பாடப்பிரிவில்
சேர்ந்து படித்தார்.
சேர்க்கையின்போது, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2
அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கியிருந்தார். குடும்ப சூழலால்
படிப்பை பாதியில் நிறுத்தினார்.நிர்வாகத்திடம் தெரிவித்து, அசல்
சான்றிதழ், கல்லுாரி முதலாமாண்டு மதிப்பெண் சான்றிதழை கேட்டார்.
கல்வி கட்டணத்தை முழுமையாக செலுத்தி பெற்றுக் கொள்ளும்படி நிர்வாகம்
தெரிவித்தது. இதுகுறித்து ஈரோடு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில்,
சையத் முகம்மது மனுதாக்கல் செய்தார். கல்லுாரி நிர்வாகத்திடம்
நீதிபதி சுகந்தி விசாரித்து பேசியதில்
தீர்வு கிடைத்தது. இதையடுத்து இரண்டாண்டுக்கு பிறகு, மாணவனுக்கு அசல் சான்றிதழ் கிடைத்தது.
