UPDATED : நவ 28, 2026 07:43 AM
ADDED : நவ 28, 2026 07:40 AM

புன்செய்புளியம்பட்டி:திருப்பரங்குன்றம்
தீபத்துாணில் இன்று தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு வரவேற்பு தெரிவித்து, புன்செய் புளியம்பட்டி சுப்பிரமணியர்
கோவிலில், நேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து
கோவிலின் முன் பக்தர்கள், கார்த்திகை விளக்கில் தீபமேற்றி கையில் ஏந்தி
வழிபாடு செய்தனர். பா.ஜ., மாவட்ட தலைவர் செந்தில்குமார்,
நிர்வாகிகள், மக்கள் கலந்து கொண்டனர்.
* பவானி வடக்கு மாவட்ட பா.ஜ.,
சார்பில், ஒன்றிய குழு தலைவர் பழனிசாமி தலைமையிலான மகளிரணியினர்,
கைகளில் விளக்கேந்தி ஆப்பக்கூடல் கணேச பாலதண்டாயுதபாணி சுவாமி
மலைக்கோவிலை சுற்றி வந்து வழிபட்டனர்.
* திருப்பூர் மாவட்டம்
தாராபுரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று, இந்து
முன்னணி கோட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையிலான நிர்வாகிகள்,
தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
பா.ஜ.,வினரும் கலந்து கொண்டனர்.
அதேசமயம் பா.ஜ., சார்பில்,
தாராபுரம் ராமர் கோவில் வளாகத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை
அலுவலகத்திற்கு எதிரே, பா.ஜ., மாவட்ட அமைப்பாளர் சுகுமார் தலைமையில்,
அறநிலையத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

