ADDED : டிச 23, 2024 09:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானி மேற்குத் தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் தரணீஷ், 18; பிட்டரான இவர் வேலைக்கு சென்று வந்தார். பவானி-குமாரபாளையம் பழைய பாலம் அருகில் காவிரியாற்றில் குளிக்க, நேற்று காலை சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரின் தந்தை தேடி சென்றார். அங்கு தரணீஷீன் துணி மட்டும் இருந்ததால் சீனிவாசன் அதிர்ச்சியடைந்தார்.
அவர் தகவலின்படி சென்ற பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள், ஆற்றில் இறங்கி தேடியதில், தரணீஷ் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

