/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாளை அனுமன் ஜெயந்தி விழா லட்டு தயாரிக்கும் பணி மும்முரம்
/
நாளை அனுமன் ஜெயந்தி விழா லட்டு தயாரிக்கும் பணி மும்முரம்
நாளை அனுமன் ஜெயந்தி விழா லட்டு தயாரிக்கும் பணி மும்முரம்
நாளை அனுமன் ஜெயந்தி விழா லட்டு தயாரிக்கும் பணி மும்முரம்
ADDED : டிச 18, 2025 05:13 AM

ஈரோடு:ஈரோடு வ.உ.சி பூங்காவில் உள்ள மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் நாளை அனுமன் ஜெயந்தி விழா கோலாகல-மாக கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக கோவிலில் வளாகத்தில் பக்தர்கள வரிசையாக செல்ல தடுப்புகள் அமைப்பது, பந்தல் அமைப்பது போன்ற பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இதேபோல் 38ம் ஆண்டாக வார வழிபாட்டு குழு சார்பில் பக்தர்களுக்கு பிரசாத-மாக லட்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கோட்டை பகுதியில் உள்ள பத்ரகாளிம்மன் கோவில் மண்ட-பத்தில் லட்டு தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பால், பனங்கற்கண்டு, நெய், தேன், சக்கரை, ஏலக்காய், முந்திரி, திராட்சை போன்ற பொருட்கள் பயன்படுத்தி மொத்தம், 75 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்படுகிறது. இந்த பணியில் 60 சமையல் கலைஞர்கள், 100 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.