ADDED : மே 03, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு வில்லரம்பட்டி முனியப்பன்பாளையத்தை சேர்ந்தவர் சின்னண்ணன், 60; மனைவி இறந்து விட்டார். இவரின் மகள் கலைச்செல்வி. திருமணமாகி சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் வசிக்கிறார். சின்னண்ணன் மகன் லோகேஸ்வரன், 25; வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்தார். தனக்கு வேலை கிடைக்கவில்லை என்று விரக்தியில் புலம்பியபடி இருந்தவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறியுள்ளனர்.
சின்னண்ணன், கலைச்செல்வி ஆகியோர் தாரமங்கலத்தில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு கடந்த, 30ல் சென்றனர். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த லோகேஸ்வரன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
