ADDED : ஏப் 26, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை::பெருந்துறை அடுத்த பூவம்பாளையம் பிரிவு எதிரில், பிரியாணி ஹோட்டல் உள்ளது. மேலாளர் இளவரசன். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி சென்றார்.
இரவு கணக்கு முடித்த வகையில், 15,647 ரூபாய் கல்லாப்பெட்டியில் வைத்திருந்தார். நேற்று காலை கடையை திறந்தபோது பணத்தை காணவில்லை. இளவரசன் புகாரின்படி பெருந்துறை போலீசார், கைவரிசை காட்டிய ஆசாமியை தேடி வருகின்றனர்.

