ADDED : ஆக 11, 2025 08:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: அம்மாபேட்டையை அருகே செலம்பனுாரை சேர்ந்தவர் யுவனேஷ்வரன், 53; ஈரோடு தனியார் பொறியியல் கல்லுாரி பேராசிரியர். குடும்பத்தினருடன் வெளியூர் சென்றவர் நேற்று காலை வீடு திரும்பினார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த, ௧0 ஆயிரம் ரூபாய், 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பித்தளை பாத்திரம் திருட்டு போனது தெரிந்தது. அவர் புகாரின்படி அம்மாபேட்டை போலீசார், களவாணிகளை தேடி வருகின்றனர்.த.வெ.க., பூத் முகவர் கூட்டம்தாராபுரம்:
த.வெ.க., ஓட்டுச்சாவடி முகவர் கூட்டம், தாராபுரத்தில் நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்ட செயலாளர் யுவராஜ் மகேஷ் தலைமை வகித்தார். பூத் கமிட்டி பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. கட்சியின் நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.