ADDED : ஜூலை 13, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, பவானி அருகே திப்பிசெட்டிபாளையத்தில், பவானி ஆற்றங்கரையோரம் மயானம் அமைந்துள்ளது. இங்குள்ள மின் மோட்டார் அறை பூட்டை உடைத்து மின் கம்பி, பீஸ் கேரியர், மின் இணைப்பான், எம்.சி.பி., மற்றும் செம்பு ஒயர் என, 10,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து தொட்டிபாளையம் பஞ்., செயலர் மாரியப்பன் புகாரின்படி, பவானி போலீசார் வழக்குப்பதிந்து, களவாணியை தேடி வருகின்றனர்.