ADDED : செப் 22, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில்: வெள்ளகோவில், எல்.கே.சி.நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம், 64; திருச்சி-கோவை ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார்.
நேற்று காலை வழக்கம்போல் கடை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு கேமரா திருட்டு போனது தெரிந்தது. அவர் புகாரின்படி வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.