/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் அடுத்தடுத்த இரு கடைகளில் திருட்டு
/
ஈரோட்டில் அடுத்தடுத்த இரு கடைகளில் திருட்டு
ADDED : மார் 03, 2024 01:49 AM
ஈரோடு;ஈரோட்டில், நள்ளிரவில் அடுத்தடுத்து இரு கடைகளில் மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றனர்.
ஈரோடு கொல்லம்பாளையம் காதர் மொய்தீன் மகன் ஜாபர், 35. செக்போஸ்ட் அருகே ஜாபர் பிரியாணி பாஸ்ட் புட் கடை வைத்துள்ளார். இவரது கடை அருகே பவன் காய்கறி கடை உள்ளது. இதன் உரிமையாளர் நன்செய் ஊத்துக்குளி சென்னப்ப நாயக்கர்பாளையத்தை சேர்ந்த யுவராஜ், 28. இரு கடைகளும் நேற்று முன்தினம் இரவு, 10:30 மணியளவில் பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை, 8:30 மணிக்கு வந்து பார்த்தபோது கடை பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடைக்குள் பொருட்கள் கலைக்கப்பட்டு கிடந்தன. பிரியாணி கடையில் இருந்து, 3,000 ரூபாய், காய்கறி கடையில், 26 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது.
காய்கறி கடை அருகே இருந்த குளிர்பான கடையிலும் திருட முயனறனர். ஆனால் அங்கு பணம் இல்லாததால் திரும்பி சென்றனர். சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி மர்ம நபர்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

