ADDED : நவ 11, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், குண்டடம் அருகே ருத்ராவதியில், கோவை பிரதான சாலையில் மோகன் என்பவர் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று காலை கடை திறக்க சென்றார்.
கடை சுவரில் ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, 16 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. அவர் புகாரின்படி குண்டடம் போலீசார், களவாணியை தேடி வருகின்றனர்.

