/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தமிழகத்தை ஹிந்தி நாடாக மாற்றி விடுவர்: நா.த.க.,வேட்பாளர் பேட்டி
/
தமிழகத்தை ஹிந்தி நாடாக மாற்றி விடுவர்: நா.த.க.,வேட்பாளர் பேட்டி
தமிழகத்தை ஹிந்தி நாடாக மாற்றி விடுவர்: நா.த.க.,வேட்பாளர் பேட்டி
தமிழகத்தை ஹிந்தி நாடாக மாற்றி விடுவர்: நா.த.க.,வேட்பாளர் பேட்டி
ADDED : ஜன 30, 2025 05:02 AM
ஈரோடு: ''தி.மு.க.,வுக்கு ஓட்டுப்பதிவு செய்தால், தமிழகத்தை ஹிந்தி நாடாக மாற்றி விடுவர்,'' என, நா.த.க., வேட்பாளர் சீதாலட்சுமி கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், வடமாநிலத்தவர் வசிக்கும் பகுதியில், தி.மு.க., சார்பில் ஹிந்தியில் அச்சிட்ட துண்டு பிரசரங்களை வழங்கினர். அதை எடுத்து வந்து, நா.த.க., வேட்பாளர் சீதாலட்சுமி, நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க., சார்பில், தமிழ் மொழி இல்லாத மாற்று மொழியில் நோட்டீஸ் அச்சிட்டுள்ளனர். தாளமுத்து நடராஜன், கீழப்பழுவூர் சின்னசாமி, சத்தியமங்கலம் முத்து என மொழிக்காக உயிர் நீத்த பலர் மூலம் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.
தமிழ் வாழ்க என பலகை மட்டும் வைக்கின்றனர். ஆனால், அவர்களது வேட்பாளரை மக்களிடம் கொண்டு செல்லும் துண்டு அறிக்கையில், தமிழ் இல்லை. தமிழர்-களை ஏமாற்றுகின்றனர். மக்களின் மொழிப்பற்றை நசுக்கும் வகையில், தமிழருக்கு துரோகம் செய்கின்றனர். தமிழர்கள், தமிழ் மொழி, மண் வளம் காக்கப்பட வேண்டும். தமிழ் சார்ந்த தொழில்கள், வணிகர்கள் உயர வேண்டும் என நாங்கள் பாடுபடு-கிறோம். எங்களுக்கு வாக்களிக்க தவறினால், ஹிந்தி நாடாக மாற்றி விடுவார்கள். அதற்கு சாட்சியாகத்தான் ஹிந்தியில் துண்டு அறிக்கை வெளியிட்ட தி.மு.க.,வின் முகத்தை மக்களிடம் காட்டு-கிறோம். இவ்வாறு கூறினார்.

