தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ டூவீலர் திருடிய களவாணி கைது

டூவீலர் திருடிய களவாணி கைது

டூவீலர் திருடிய களவாணி கைது


ADDED : டிச 22, 2025 09:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2025 09:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: -கோவில் வளாகத்தில் மொபட் திருடிய பழங் குற்றவாளியை, சத்தியமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

கோபி அருகே என் ஜி.பாளையம், பூஞ்சோலை நகரை சேர்ந்தவர் ரங்கநாதன். கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். கடந்த ஆக., 27ல் பண்ணாரி கோவில் அருகில் திருமண மண்டபத்தில் கேட்-டரிங் பணிக்கு மனைவி அன்னபூரணியுடன் சென்றார். 29ம் தேதி மாலை வேலை முடிந்து, பண்ணாரி கோவிலுக்கு மொபட்டில் அன்னபூரணி சென்றார். தரிசனம் முடித்து திரும்பி வந்தபோது மொபட்டை காணவில்லை. புகாரின்படி சத்தி போலீசார், களவாணியை தேடி வந்தனர்.

இது தொடர்பாக திருப்பூர், வள்ளிபுரத்தை சேர்ந்த ரமேஷ்குமார், 32, என்பவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தி கிளை சிறையில் அடைத்தனர்.இவர் மீது சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஸ்டேஷன்களில், 15க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இவர் கோபி அருகே கவுந்தப்பாடியில் தங்கி கூலி வேலை செய்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us