தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/திம்மராய பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம்

திம்மராய பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம்

திம்மராய பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம்


ADDED : செப் 23, 2026 07:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 07:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டி அருகே கீழ்முடுதுறை திம்மராய பெருமாள் கோவிலில் நடப்பாண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது. இதையொட்டி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் தம்பதி சமேத திம்மராய பெருமாளுக்கு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து பெருமாளுக்கும், தாயார்களுக்கும் ரக்ஸாபந்தனம் நடந்து வஸ்திரங்கள் சாற்றப்பட்டன. பின் மாங்கல்ய பூஜை செய்யப்பட்டு பெருமாள் கையில் வைக்கப்பட்ட திருமாங்கல்யத்தை பூதேவி, ஸ்ரீதேவி தாயார்களுக்கு பட்டாச்சாரியார்கள் அணிவித்தனர். இதை தொடர்ந்து மாலை மாற்றுதல், மஹா தீபாராதனை நடந்தது. திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us