ADDED : நவ 09, 2024 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவன்மலையில் திருக்கல்யாணம்
காங்கேயம், நவ. 9-
காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார நிகழ்வு, மலை கோவில் அடிவாரத்தில் நான்கு வீதிகளில், நேற்று முன்தினம் இரவு நடந்தது. இந்நிலையில் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், நேற்று காலை அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதை தொடர்ந்து இரவு, 7:50 மணிக்கு முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின் நான்கு வீதிகளில் திருவுலாக்காட்சி நடந்தது. சஷ்டி விழாவையொட்டி காப்பு கட்டி விரதம் இருந்த, ௧,௨௦௦ பேர், சிறப்பு பூஜையில் பங்கேற்று, விரதத்தை நிறைவு செய்தனர். அதேசயம் திருக்கல்யாணத்தை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர். இன்று விழா நிறைவடைந்து, சுவாமி மலைக்கு எழுந்தருள்கிறார்.