திருக்குறள் மாணவர் மாநாடு பரிசு பெற்றோருக்கு பாராட்டு
திருக்குறள் மாணவர் மாநாடு பரிசு பெற்றோருக்கு பாராட்டு
ADDED : ஜன 30, 2026 05:40 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: கன்னியாகுமரியில் கடந்த, 23, 24ல் திருக்குறள் மாணவர் மாநாடு நடந்தது. இதில் ஈரோடு மாவட்டம் சார்பில், 63 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கவிதை எழுதுதல், குறும்பட விமர்சனம் எழுதுதல், பேச்சு போட்டி, வினாடி வினா என எட்டு வித போட்டிகள் மாநில அளவில் நடந்தது.
இதில் ஈரோடு அரசு மாதிரி பள்ளி மாணவி கனிஷ்கா பேச்சு போட்டியிலும், சரவணன் கவிதை எழுதுதல் போட்டியிலும், சரவணன் குழுவினர் பறை அடித்தல் போட்டியிலும் வெற்றி பெற்றனர். திருக்குறளை கண்டுபிடித்தல் போட்டியில் கொங்கு நேஷனல் பதின்ம மேல்நிலை பள்ளி மாணவர் கனுவர்ஷன் சிறப்பு பரிசு பெற்றார். இவர்களை முதன்மை கல்வி அலுவலர் மான்விழி பாராட்டி வாழ்த்தினார்.
