/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் 3 இடங்களில் திருக்குறள் பயிற்சி தொடக்கம்
/
மாவட்டத்தில் 3 இடங்களில் திருக்குறள் பயிற்சி தொடக்கம்
மாவட்டத்தில் 3 இடங்களில் திருக்குறள் பயிற்சி தொடக்கம்
மாவட்டத்தில் 3 இடங்களில் திருக்குறள் பயிற்சி தொடக்கம்
ADDED : ஆக 15, 2025 02:12 AM
ஈரோடு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில், திருக்குறள் திருப்பணிகள் நுண் பயிற்சி வகுப்பு துவக்க விழா, ஈரோடு, சம்பத் நகர் டிஜிட்டல் நுாலகத்தில் நடந்தது. கலெக்டர் கந்தசாமி, பயிற்சியை துவக்கி வைத்து பேசினார்.
இத்திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் திருக்குறளில் ஆர்வம், புலமை மிக்க ஆசிரியர், பயிற்றுனர் தேர்வு செய்து பயிற்சி வழங்கி, மாவட்டம் தோறும் தொடர் பயிலரங்கு, பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.
இங்கும், கோபி அரசு மருத்துவமனை அருகே பூங்கா நுாலகம், பவானி பி.டி.ஓ., அலுவலகம் என மூன்று இடங்களில், 30 வாரங்கள் சனிக்கிழமை தோறும் இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படும். பயிற்சியில் முதல் மூன்று இடங்களுக்குள் தேர்வு செய்யப்படுவோருக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
இப்பயிற்சியில் பங்கு பெற, ஈரோடு விஸ்வநாதன் - 91235 50677, பவானி க.வீ.வேதநாயகம் - 94434 12819, கோபி எண்ணமங்கலம் அ.பழனிசாமி - 98427 11401 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.