தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல' த.வெ.க.,வை சாடிய முத்தரசன்

'இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல' த.வெ.க.,வை சாடிய முத்தரசன்

'இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல' த.வெ.க.,வை சாடிய முத்தரசன்


ADDED : அக் 02, 2026 03:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2026 03:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: இந்திய கம்யூ., கட்சி முன்னாள் செயலர் மற்றும் தேசிய கட்டுப்-பாட்டுக்குழு தலைவர் முத்தரசன், ஈரோட்டில் நேற்று கூறியதா-வது:

இந்திய தேர்தல் ஆணையம் யார் உத்தரவுக்கும் கட்டுப்பட்ட-தல்ல, சுதந்திரமானது. வாக்காளர் உரிமை, வாக்கை பாதுகாக்க வேண்டிய கடமை அதற்குண்டு. கடந்த, 2023க்கு முன் பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஜனாதிபதி போன்றோர் தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் முறை இருந்-தது. பின் மாற்றப்பட்டு, பிரதமரால் ஞானேஷ்குமார் நியமிக்கப்-பட்டு, பா.ஜ., கட்டுப்பாட்டில் செயல்படுகிறார்.

எஸ்.ஐ.ஆர்., என்ற பெயரில் தேசிய அளவில், 13.30 கோடி வாக்காளர்களை நீக்கியுள்ளார். அவர்கள் இந்தியாவின் பிரஜைகளாக எதிர்கா-லத்தில் இருப்பார்களா என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு பொறுப்பேற்று ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும். அல்-லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.இதற்கான போராட்டத்தை இண்டி கூட்டணியும், எங்களது கூட்-டணியும் தொடர முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் தேர்தலில், 80,000 ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க.,வில் வென்றுவிட்டு ராஜினாமா செய்து, த.வெ.க.,வில் இணைந்து, தேர்தலை சந்திப்-பது ஜனநாயக படுகொலையாக பார்க்கிறோம். அதனால் தாராபு-ரத்தில் இந்திய கம்யூ.,வும், மதுராந்தகத்தில் மார்க் கம்யூ.,வும் வேட்பாளரை நிறுத்தி உள்ளது. எம்.எல்.ஏ., பதவியை ராஜி-னாமா செய்து கட்சியில் இணைந்த போதே கண்டித்தோம். அவ்-வாறு வந்தவர்களுக்கு கட்சியில் பதவி, வேட்பாளர் வாய்ப்பும் தருவது மற்றவர்களை தங்கள் பக்கம் வரத்துாண்டுவதாகவே பார்க்கிறோம். இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. இவ்வாறு கூறினார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us