தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ திங்களூரின் வளர்ச்சி பணிகளை பட்டியலிட்டு தோப்பு வெங்கடாச்சலம் வாக்கு சேகரிப்பு

திங்களூரின் வளர்ச்சி பணிகளை பட்டியலிட்டு தோப்பு வெங்கடாச்சலம் வாக்கு சேகரிப்பு

திங்களூரின் வளர்ச்சி பணிகளை பட்டியலிட்டு தோப்பு வெங்கடாச்சலம் வாக்கு சேகரிப்பு


ADDED : ஏப் 17, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 05:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெருந்துறை :

பெருந்துறை தொகுதி தி.மு.க., வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலம், திங்களூர், வெட்டயன்கிணறு, மந்திரிபாளையம், நிச்சாம்பாளையம், கருக்குப்பாளையம் உள்ளிட்ட பஞ்.,களில் மக்களை சந்தித்து நேற்று வாக்கு

சேகரித்தார்.

திங்களூர், நடுப்பாளையம், மடத்துப்பாளையம், தோரணவாவி, பாலியக்காடு, வெட்டயன்கிணறு, மந்திரிபாளையம், தாண்டாகவுண்டன்பாளையம், மணியக்காரன்பாளையம், பூசாரிபாளையம், கைவெட்டியூர், கல்லாகுளம்புதூர், ஊத்துப்பாளையம், செல்லியம்பாளையம், பிரப் நகர், நிச்சாம்பாளையம், நீலாகவுண்டன்பாளையம், கருக்குப்பாளையம், கூதாம்பி, ஆவரங்காடு பகுதிகளில் ஓட்டு சேகரித்தபோது, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அப்போது அவர் பேசியதாவது: கடந்த, 2011 முதல், 2021 வரை, நான் அமைச்சாராகவும், எம்.எல்.ஏ.,வாகவும் இருந்தபோது, திங்களூர் பகுதியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்காக பல்வேறு குளங்கள் துார் வாரப்பட்டன. அதன் மூலம் கிடைத்த நிதியை கொண்டு, சுற்றியுள்ள பல்வேறு கோயில்களுக்கு வழங்கி, குடமுழுக்கு செய்ய பக்க பலமாக இருந்தேன்.

திங்களூரை சுற்றியுள்ள மற்றும் கடும் தண்ணீர் பஞ்சமுள்ள தோரணவாவி, மடத்துப்பாளையம், பாப்பம்பாளையம், வெட்டையன்கிணறு, கருக்குப்பாளையம், போலநாயக்கன்பாளையம் போன்ற பஞ்.,களுக்கு கொடிவேரி திட்டத்தின் மூலம் தடையில்லாமல் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தேன். திங்களூரில் புதிய பத்திரப்பதிவு அலுவலகம் கட்டப்பட்டது. திங்களூர் ஆரம்ப சுகாதார நிலையம், நான்கு படுக்கை வசதியில் இருந்ததை, 33 படுக்கைகளுடன் கூடிய நவீன மருத்துவமனையாக தரம் உயர்த்தபட்டது. வெட்டையன்கிணறு பகுதியில், 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைத்துள்ளேன்.

திங்களூர் சந்தைக்கு அருகாமையில் ஒரு கோடி ரூபாயில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டித் தரப்பட்டது. திங்களூர் நால் ரோட்டில் தனியார் பங்களிப்போடு ரவுண்டானா அமைக்கப்பட்டது உள்ளிட்ட, செய்த பல்வேறு பணிகளை எடுத்து கூறியும், தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை கூறியும் வாக்கு சேகரித்தார். அவருடன் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர்கள் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us